
Manavai News
மணவாளக்குறிச்சி, ஆண்டார்விளை தேவி முத்தாரம்மன் கோவில் திருவிழா
மணவாளக்குறிச்சி, ஆண்டார்விளை தேவி முத்தாரம்மன் கோவில் திருவிழா
02-05-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஆண்டார்விளை தேவி முத்தாரம்மன் கோவில் திருவிழா வருகிற 10-ம் தேதி தொடங்கி 12- ம் தேதி வரை நடக்கிறது. 10- ம் தேதி காலையில் கணபதி ஹோமமும், சமய வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கான பாட்டு, பேச்சு, வினாடி-வினா, ஒப்புவித்தல் ஆகிய போட்டிகளும், மாலை 5 மணிக்கு லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், இரவு 9 மணிக்கு மெல்லிசை விருந்தும் நடக்கிறது.
11- ம் தேதி காலையில் விளையாட்டு போட்டிகளும், மாலையில் திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து சமய மாநாடும், பரிசு வழங்குதலும் நடக்கிறது.
12-ம் தேதி காலையில் நையாண்டி மேளமும், வில்லிசையும், மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், மதியம் 1 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு தீபாராதனையும், 6.30 மணிக்கு தால பொலிவு விளக்கு ஊர்வலமும், இரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. விழா ஏற்பாட்டை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
0 Comments: