
குமரிமாவட்ட செய்திகள்
நாகர்கோவிலில் பெட்ரோல் லிட்டர் ரூ.66.46-க்கு விற்பனை: டீசல் விலை ரூ.53.52 ஆக உயர்த்துள்ளது
நாகர்கோவிலில் பெட்ரோல் லிட்டர் ரூ.66.46-க்கு விற்பனை:
டீசல் விலை ரூ.53.52 ஆக உயர்த்துள்ளது
01-05-2015
பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் பொதுத்துறை எண்ணை நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்த நிலையில் நேற்று பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.96 (உள்ளூர் வரி சேர்க்காமல்) உயர்த்தப்பட்டது.
டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.37 காசுகள் உயர்ந்தது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த விலை உயர்வை தொடர்ந்து நாகர்கோவிலில் ரூ. 62.20 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.66.46 ஆக உயர்த்தது. அதாவது லிட்டருக்கு ரூ.4.26 காசுகள் உயர்த்துள்ளது. லிட்டருக்கு 50.98 ஆக இருந்த டீசல் விலை ரூ.53.52 ஆக உயர்த்துள்ளது. இதன் விலை உயர்வு ரூ.2.54 காசுகள் ஆகும்.
பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் பொது மக்கள், ஆட்டோ, கார் டிரைவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வுக்கு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
0 Comments: