
Manavai News
மணவாளக்குறிச்சி, சின்னவிளை புனித அந்தோணியார் ஆலயத்தில் சுமார் 1½ மணி நேரம் நடைபெற்ற வாணவேடிக்கை: பொதுமக்கள் கண்டு களித்தனர்
மணவாளக்குறிச்சி, சின்னவிளை புனித அந்தோணியார் ஆலயத்தில் சுமார் 1½ மணி நேரம் நடைபெற்ற வாணவேடிக்கை: பொதுமக்கள் கண்டு களித்தனர்
08-02-2015
மணவாளக்குறிச்சி. சின்னவிளை புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா கடந்த மாதம் 27- ம் தேதி துவங்கி பிப்ரவரி 8-ம் தேதி வரை நடக்கிறது. நேற்று 12-ம் நாள் திருவிழா கொண்டாடப்பட்டது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை மற்றும் புகழ்மாலை நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து இரவு 8.30 மணி அளவில் மாபெரும் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணிநேரம் வாணவேடிக்கை நடைபெற்றது. கோவில் வளாகத்தில் ஏராளமானோர் இதை கண்டுகளித்தனர். மேலும் கண்ணைக்கவரும் பல வண்ணங்களால் நடந்த வாணவேடிக்கையை மணவாளக்குறிச்சி பகுதியிலுள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளின் மாடியில் நின்றும், மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதி சின்னவிளை செல்லும் சாலையில் நின்று ஏராளமானோர் நின்றும் கண்டு களித்தனர்.
வாணவேடிக்கை நிகழ்ச்சி சுமார் ரூபாய் 4 இலட்சம் செலவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனை சின்னவிளை “யங் ஸ்டார்ஸ்” குழுவினர் செய்திருந்தனர். தொடர்ந்து தேர்பவனி நிகழ்ச்சி நடைபெற்றது.
0 Comments: