
Manavai News
மணவாளக்குறிச்சியில் ரமலானை முன்னிட்டு இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன
மணவாளக்குறிச்சியில் ரமலானை முன்னிட்டு இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன
30-07-2014
மணவாளக்குறிச்சியில் நேற்று ரமலான் பெருநாள் கொண்டாடப்பட்டது. காலை ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டன. தொடர்ந்து இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் பீச் ரோடு மைதானத்தில் பல விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
காலையில் சிறுவர் சிறுமியர்கள் கலந்து கொண்ட ஓட்டப் பந்தயம், செயர் சுற்றுதல், குப்பியில் நீர் இறைத்தல் உள்பட பல போட்டிகள் நடந்தன. தொடர்ந்து மாலையில் திருமணம் முடிந்தவர்களுக்கும், திருமணம் முடியாதவர்களுக்கமான மாபெரும் வடம் இழுத்தல் போட்டி நடைபெற்றன. இதில் திருமணம் முடிந்தவர்கள் வெற்றி பெற்றனர்.
விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளை முன்னாள் இளைஞர் பேரவை தலைவர் சலாவுதீன் தொகுத்து வழங்கினார். விளையாட்டு போட்டி ஏற்பாடுகளை இளைஞர் பேரவை தலைவர் அசாருதீன், துணைத்தலைவர் முகமது ரியாஸ், செயலாளர் முஹமது பாஸித், துணைசெயலாளர் ஸியாத், பொருளாளர் முஹமது சர்ஜூன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
0 Comments: