
District News
ரமலான் பெருநாளை முன்னிட்டு திட்டுவிளை ஜும்மா பள்ளிவாசலில் ராட்சத கேக் வெட்டி பொதுமக்களுக்கு விநியோகம்
ரமலான் பெருநாளை முன்னிட்டு திட்டுவிளை ஜும்மா பள்ளிவாசலில் ராட்சத கேக் வெட்டி பொதுமக்களுக்கு விநியோகம்
30-07-2014
இஸ்லாமியர்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் பெருநாளான ரம்ஸான் பண்டிகை நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டன. இதேபோல் திட்டுவிளை ஜும்மா பள்ளிவாசலில் காலையில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
தொடர்ந்து ஜமாஅத் சார்பில் பள்ளிவாசல் முன் பகுதியில் மிகப்பெரிய கேக் ஒன்று வெட்டப்பட்டது. அந்த கேக் 30 அடி நீளமும், 2.5 அடி அகலமும் இருந்தது. கேக் வெட்டப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
0 Comments: