
District News
குமரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்
குமரி மாவட்டத்தில் ரமலான் பெருநாள் கொண்டாட்டம்
30-07-2014
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ரம்ஸான் பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகை முஸ்லிம்களின் மாதமான ரமலான் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகையின்போது ஏழைகளுக்கு உணவு அல்லது பணம் வழங்கப்படுவது வழக்கம். இதனால் ஈகைத்திருநாளாகவும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
குமரி மாவட்டத்திலும் ரமலான் பெருநாள் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி நாகர்கோவில் இளங்கடை ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்புத்தொழுகையில் முஸ்லிம் ஆண்களும், பெண்களும், சிறுவர், சிறுமிகளும் கலந்து கொண்டனர்.
இதேபோல் நாகர்கோவில் இடலாக்குடி பள்ளிவாசல், அரிப்புத்தெரு பள்ளிவாசல், வடசேரி பள்ளிவாசல், மணிமேடை பகுதியில் உள்ள கலாச்சாராப்பள்ளி, மணவாளக்குறிச்சி, மாதவலாயம், திட்டுவிளை, தக்கலை, திருவிதாங்கோடு, குளச்சல், தேங்காப்பட்டணம் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
கடந்த 1 மாத காலமாக நோன்பிருந்து வந்த முஸ்லிம்கள் நேற்று குளித்து, புத்தாடை உடுத்தி, ஏழைகளுக்கு உணவு மற்றும் பொருள் உதவி செய்தும், வீடுகளில் இனிப்பு பதார்த்தங்களுடன் கூடிய அறுசுவை உணவுகளை தயாரித்து உறவினர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டார்களுக்கு வழங்கியும், குடும்பத்தினருக்கு விருந்து பரிமாறியும் ரமலான் பெருநாளை கோலாகலமாக கொண்டாடினார்கள்.
0 Comments: