
Manavai News
மண்டைக்காடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: மணவாளக்குறிச்சி போலீஸ் ஏட்டு சாவு
மண்டைக்காடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: மணவாளக்குறிச்சி போலீஸ் ஏட்டு சாவு
18-07-2014
குளச்சல் அருகே உள்ள பள்ளிவிளாகத்தை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 45). இவர் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார்.
![]() |
போலீஸ் ஏட்டு நாகராஜன் |
நேற்று முன்தினம் இரவு இவர் பணிமுடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். கொட்டில்பாடு பகுதியில் வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் நாகராஜன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மோதிய மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி சால்பின்(18) காயம் அடைந்தார். இவர் சிகிச்சைக்காக குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
0 Comments: