
Manavai News
பாலஸ்தீன குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து மணவாளக்குறிச்சி பொதுமக்கள் சார்பில் கண்டனம்
பாலஸ்தீன குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து மணவாளக்குறிச்சி பொதுமக்கள் சார்பில் கண்டனம்
05-08-2014
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. இதில் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 1600 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இதில் ஒன்றும் அறியாத பிஞ்சு குழந்தைகள், பெண்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலின் கொடூர தாக்குதலை கண்டித்து பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மணவாளக்குறிச்சியில் பொதுமக்கள், இஸ்லாமிய இளைஞர்கள், சோசியல் டொமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்பட பல கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இஸ்ரேலை கண்டித்து மணவாளக்குறிச்சி பகுதியில் கண்டன பலகை வைக்கப்பட்டது.
0 Comments: