
சுற்றுவட்டார செய்திகள்
வெள்ளிமலை வித்யஜோதி பட்டமளிப்பு விழாவிற்கான பந்தல் கால்நாட்டு விழா நடந்தது
வெள்ளிமலை வித்யஜோதி பட்டமளிப்பு விழாவிற்கான பந்தல் கால்நாட்டு விழா நடந்தது
04-08-2014
வெள்ளிமலை ஹிந்துதர்ம வித்யாபீடம் சார்பில் நடக்கும் வித்யஜோதி பட்டமளிப்பு வெள்ளிவிழா மற்றும் சமயவகுப்பு மாணவர் மாநாடு கூட்டுமங்கலம் விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வைத்து ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி நடக்கிறது. இதற்கான பந்தல் கால்நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
விழாவிற்கு மண்டைக்காடு பேரூராட்சி தலைவி மகேஸ்வரி முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட ஹிந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் மிசா சோமன் முன்னிலை வகித்தார். ஹிந்து தர்மவித்யா பீடத்தலைவர் சைதன்யானந்தா மகராஜ் பந்தல் கால்நாட்டினார். நிகழ்ச்சியில் திருப்பணி குழுத்தலைவர் அழகிமணி, விழாக்குழு தலைவர் ஜவகுமார், சமயவகுப்பு மாவட்ட அமைப்பாளர் ராமச்சந்திரன், வித்யா பீட தேர்வுக்குழு ஆணையர் ஜெயா, மாநில வழக்கறிஞர் பிரிவு செயாளர் மணிகண்டன், மண்டைக்காடு பேரூராட்சி துணைத்தலைவர் ஜெகன் சந்திரகுமார், சமயவகுப்பு ஒன்றிய அமைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: