
குமரிமாவட்ட செய்திகள்
நாகர்கோவிலில் 10 நாட்கள் நடைபெற உள்ள புத்தக திருவிழா: சாலமன் பாப்பையா, ஜெயமோகன், ஜாகீர் உசேன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு
நாகர்கோவிலில் 10 நாட்கள் நடைபெற உள்ள புத்தக திருவிழா: சாலமன் பாப்பையா, ஜெயமோகன், ஜாகீர் உசேன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு
04-08-2014
குமரி மாவட்ட கல்வி நிறுவனங்கள், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து, குமரி மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு நடக்கும் 2-ம் வருட புத்தக திருவிழா நாகர்கோவில் எஸ்.எல்.பி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து வருகிற 16-ம் தேதி துவங்கி 25-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. தமிழகத்தின் மிகமுக்கிய பதிப்பகங்கள், விற்பனையாளர்கள் இதில் அரங்குகள் அமைக்கின்றனர். மொத்தம் 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.
![]() |
ஞானசம்பந்தம், சாலமன் பாப்பையா, நாஞ்சில் நாடன், பொன்னீலன், ஜெயமோகன், நாஞ்சில் சம்பத் |
தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு புத்தக அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும் சிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் கலந்து கொள்கின்றனர். பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத், கு.ஞானசம்பந்தன், எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், பொன்னீலன், பேராசிரியர் தமிழவன், ஜெயமோகன், லட்சுமணபெருமாள், வெங்கடேசன் போன்றோர் சொற்பொழிவாற்ற உள்ளனர்.
சாலமன் பாப்பையா பட்டிமன்றம், ஜாகீர் உசேன் குழுவினரின் நாட்டிய நாடகம் போன்றவைகள் நடைபெற உள்ளன. மேலும் துவக்க நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்களும் பங்கேற்க உள்ளனர்.
0 Comments: