
Manavai News
மணவாளக்குறிச்சி இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் நடைபெறும் ஈகைப் பெருநாள் நிகழ்வுகள்
மணவாளக்குறிச்சி இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் நடைபெறும் ஈகைப் பெருநாள் நிகழ்வுகள்
27-07-2014
![]() |
மணவாளக்குறிச்சி பள்ளிவாசலின் எழில்மிகு தோற்றம் |
மணவாளக்குறிச்சி இஸ்லாமிய இளைஞர் பேரவையின் 29-வது ஆண்டு விழா மற்றும் ஈகைப் பெருநாள் தினவிழா நிகழ்ச்சிகள் மணவாளக்குறிச்சி பீச்ரோடு மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
ரமலான் பெருநாள் அன்று பெருநாள் தொழுகைக்கு பின்னர் மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. தொடர்ந்து மாலையில் வடம் இழுத்தல் போட்டி நடைபெறுகிறது. விளையாட்டு போட்டிகள் பீச் ரோடு மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.
30-ம் தேதி இரவு 8 மணி அளவில் வடகரை தீனா பானா பள்ளிவாசல் இமாம் மௌலவி சாஹூல் ஹமீது அவர்கள் பங்கேற்கும் மார்க்க பேருரை நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு இளைஞர் பேரவை முன்னாள் தலைவர் சலாவுதீன் தலைமை தாங்குகிறார். முஹல்ல பொருளாளர் அப்துல் சலாம் செயற்குழு உறுப்பினர் ஹைதர் அலி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இளைஞர் பேரவை செயலாளர் முகம்மது பாஸித் மன்ற அறிக்கை வாசிக்கிறார். ஜும்மா பள்ளிவாசல் இமாம் மௌலவி செய்யது அஹமது கபீர் மஹ்லரி, முன்னாள் இமாம் முஹம்மது அலி பாதுஷா ரஹ்மானி ஆகியோர் துவக்கவுரையும், செயற்குழு உறுப்பினர் பதர்ஸமான் வாழ்த்துரையும் வழங்குகின்றனர்.
![]() |
நாகர்கோவில் இஸ்லாமிய கலாச்சாரகழக பள்ளிவாசல் தலைமை இமாம் சவுக்கத் அலி உஸ்மானி |
31-ம் தேதி இரவு 8 மணிக்கு நாகர்கோவில் கலாச்சாரகழக பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி சவுகத் அலி உஸ்மானி அவர்களின் மாபெரும் இஸ்லாமிய பேருரை நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு முன்னாள் இளைஞர் பேரவை செயலாளர் முஹம்மது முபீன் தலைமை தாங்குகிறார். தலைமை இமாம் மௌலவி ஜலீல் உஸ்மானி துவக்கவுரையும், முஹல்ல தலைவர் பஷீர் வாழ்த்துரையும் வழங்குகின்றனர்.நிகழ்ச்சியின் போது விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
விழா நிகழ்ச்சிகளை இஸ்லாமிய இளைஞர் பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
0 Comments: