
District News
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா: சரத்குமார் கலந்து கொண்டார்
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா: சரத்குமார் கலந்து கொண்டார்
26-07-2014
குமரி கிழக்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா, சரத்குமார் பிறந்தநாள் விழா, சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு விழா நாகர்கோவில் வேலை வாய்ப்பு அலுவலகம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து இன்று காலையில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்டச் செயலாளர் அரசன் பொன்ராஜ் தலைமை தாங்கினார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு மாணவ–மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கி பேசினார். விழாவில் 1200 மாணவ–மாணவிகளுக்கு அவர் பரிசுகளும், கேடயமும் வழங்கினார்.
விழாவில் பொதுச் செயலாளர் கரு. நாகராஜன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெய பிரகாஷ், தென்மண்டல அமைப்புச் செயலாளர் சுந்தர், மாவட்ட அவைத்தலைவர் புளியடி பால்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: