
Manavai News
மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது
மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது
23-07-2014
மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா வழங்கினார்.
இப்பள்ளியில் சென்ற கல்வியாண்டில் மேல்நிலை தேர்வு எழுதிய 280 மாணவர்களுக்கு தமிழக அரசின் நலத்திட்டங்களில் ஒன்றான விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் ஜாண் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் மன்ற செயலர் ராஜேந்திரன், ஆசிரியர்கள் ராபின்சன், வில்லியம் ஜேம்ஸ், ரெஸ்கின் கிறிஸ்து ராஜ், மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments: