சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பந்தல்கால் நாட்டு விழா
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பந்தல்கால் நாட்டு விழா
08-02-2015
மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மிக முக்கியமானது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இங்கு மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு மாசி திருவிழா வருகிற மார்ச் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி பந்தல்கால் நாட்டு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகமும், உஷ பூஜையும், நிறைபுத்தரிசி பூஜையும் நடந்தது. அதைத்தொடர்ந்து 8 மணிக்கு பந்தல்கால் நாட்டு விழா நடந்தது.
இதில் முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், அவருடைய மனைவி செல்வ அழகி, மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி முருகேசன், இடைக்கோடு தந்திரி மகாதேவரு, சட்டநாதகுருக்கள், கோபாலகுருக்கள், பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், அ.தி.மு.க. பேரவை ஒன்றிய துணைத்தலைவர் விஜயகுமார், ஹைந்தவ இந்து சேவா சங்க தலைவர் கந்தப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பகல் 1 மணிக்கு உச்சபூஜையும், அன்னதானமும் நடந்தது. மாலை சாயரட்சை பூஜையும், அத்தாழ பூஜையும், இரவு வாணவேடிக்கையும் நடந்தது.




0 Comments: