
Manavai News
மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி வீட்டில் திருடிய 2 பேர் கைது
மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி வீட்டில் திருடிய 2 பேர் கைது
02-02-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் தோமையார்தெருவை சேர்ந்தவர் நெவில்சந்தோஷ் (வயது 35). வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 29-ம தேதி ஊருக்கு வந்தார். 1-ம தேதி தன்னுடைய சித்தப்பா வீட்டிற்கு மனைவியும், குழந்தையையும் அனுப்பி விட்டுவிட்டு வீட்டில் பின்புறம் போயிருந்தார்.
பின்னர் திரும்பி முன் வீட்டிற்கு வரும்போது மேசை மீது வைத்திருந்த செல்போனையும், 1 பவுன் செயினையும் காணவில்லை. உடனே பக்கத்தில் உள்ள வீடுகளில் விசாரித்தார். அப்போது குளச்சல் லியோன்நகர் பகுதியை சேர்ந்த சகாயராஜ் மகன் வினோத் (23), பவுஸ்டின் மகன் ரவி (29) ஆகியோர் வீட்டில் இருந்து போனதாக கூறினார்கள்.
இச்சம்பவம் குறித்து நெவில் சந்தோஷ் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, ராஜரெத்தினம் ஆகியோர் வழக்குபதிவு செய்து ரவி, வினோத் ஆகியோரை தேடி வந்தனர். அப்போது கல்லடிவிளை என்ற இடத்தில் 2 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்ததில் செல்போனையும், நகை திருடியதை ஒப்புக்கொண்டனர். பின்னர் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் செல்போனையும், நகையையும் போலீசார் கைப்பற்றினர்.
0 Comments: