
Announcements
Manavai News
மணவாளக்குறிச்சி சின்னவிளையை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் குளத்தில் மூழ்கி சாவு
மணவாளக்குறிச்சி சின்னவிளையை சேர்ந்த
பாலிடெக்னிக் மாணவர் குளத்தில் மூழ்கி சாவு
நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்
06-02-2012
மணவாளக்குறிச்சி சின்னவிளையை சேர்ந்தவர் சகாய ஆண்டனி. இவரது மகன் கீதியோன் (வயது 19). இவர் அம்மாண்டிவிளையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிகல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தன்னுடன் படித்து வந்த அஸ்லின், ஆனந்த் விஜய், அஜீத் ஆகியோருடன் நேற்று முட்டம் பகுதிக்கு சென்றார். நண்பர்கள் 4 பேரும் இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தனர்.
பின்னர் பெரியகுளம் எழுத்திட்டான்பாறை அருகே சென்றனர். அங்கு நண்பர்கள் 4 பேரும் குளத்தில் இரங்கி குளிக்க முடிவு செய்தனர். முதலில் கீதியோன் குளத்தில் இறங்கினார். அப்போது கால் வழுக்கி குளத்திற்குள் விழுந்தார். அவர் குளத்தில் தண்ணீரில் தத்தளித்தபடி மூழ்கினார். அதை பார்த்த நண்பர்கள் கூச்சல் போட்டனர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து குளத்தில் மூழ்கிய கீதியோனை மீட்டனர். உடனடியாக அவரை திங்கள்சந்தையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவாணி முத்து வழக்கு பதிவு செய்து கீதியோன் உடலை ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்து கீதியோனின் பெற்றோரும், உறவினர்களும் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று கீதியோனின் உடலை பார்த்து கதறி அழுதனர். அந்த காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
0 Comments: