
Manavai News
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டி, மணவாளக்குறிச்சியில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் உண்ணாவிரதம்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டி, மணவாளக்குறிச்சியில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் உண்ணாவிரதம்
13-08-2015
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டி, மணவாளக்குறிச்சி சந்திப்பில் குருந்தன்கோடு மேற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.
உண்ணாவிரத போராட்டத்திற்கு மணவாளக்குறிச்சி பேரூர் காங்கிரஸ் தலைவர் தனிஸ் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட காங்கிரஸ் (கிழக்கு) மாவட்டத் தலைவர் கண்ணாட்டுவிளை பாலையா துவக்கி வைத்தார். வழக்கறிஞரும், குருந்தன்கோடு மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவருமான கிளாட்சன் முன்னிலை வகித்தார்.
காங்கிரஸ் நிர்வாகிகளான குமார், குற்றாலம், தாய் ஏஜென்சீஸ் அன்சாரி, ஜெய்ஹிந்த் மஜீது, செய்யது அலி ஆகியோர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ், வக்கீல் தனிஸ்லாஸ், மகிளா காங்கிரஸ் சார்பில் திருமதி சரோஜா ஆகியோர் பேசினர்.
உண்ணாவிரதத்தை குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் முடித்து வைத்தார். உண்ணாவிரதத்தின் போது மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசப்பட்டது.
செய்தி மற்றும் போட்டோஸ்
“புதியபுயல்” முருகன்
மணவாளக்குறிச்சி
0 Comments: