
Manavai News
மணவாளக்குறிச்சியில் காங்கிரஸ் பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
மணவாளக்குறிச்சியில் காங்கிரஸ் பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
11-08-2015
மணவாளக்குறிச்சி பேரூர் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் தாய் ஏஜென்சீஸ் வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தனிஸ் தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் எட்வின் ஜோஸ் முன்னிலை வகித்து, தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தாய் ஏஜென்சீஸ் வளாகத்தில் கட்சி அலுவலகம் திறப்பது, கட்சியின் முன்னோடிகள் ஜஸ்டின் மற்றும் தங்கையா ஆகியோரின் கொடி கம்பங்கள் நிறுவுவது, மாநில மகிளா காங்கிரஸ் தலைவியாக சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணிவை நியமனம் செய்த அகில காங்கிரஸ் கமிட்டிக்கு நன்றியை தெரிவித்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு வட்டார காங்கிரஸ் துணை தலைவர் குமார், மாவட்ட பொதுசெயலாளர் குற்றாலம், வட்டார பொதுசெயலாளர் மஜீது, சேகர், மத்தியாஸ், சின்னவிளை ராபின்சன் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

0 Comments: