Manavai News
மணவாளக்குறிச்சியில், குளச்சல் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம்
மணவாளக்குறிச்சியில், குளச்சல் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம்
08-12-2014
கன்னியாகுமரி மாவட்டம் என்பது மலைவளமும், கடல்வளமும் மற்றும் நிலப்பகுதியும் உள்ளடக்கிய பகுதியாகும், கன்னியாகுமரி மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள்.
இயற்கையிலேயே கடல் ஆழப்பகுதியான குளச்சலில் வரத்தக துறைமுகம் அமைக்க 2001 ஆம் ஆண்டு தமிழக அரசாங்கம் மலேசிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு, பின்னர் அது கிடப்பில் போடப்பட்டது. இந்த குளச்சல் வர்த்தக துறைமுக திட்டத்தை 2004 ஆம் ஆண்டு மத்திய ஐக்கிய முற்போக்கு அரசாங்கம் ஆட்சியில் ஏ.வி.பெல்லார்மின் முயற்சியால் குளச்சல் வர்த்தக துறைமுகம் அமைக்க பூர்வாங்க பணி ஆரம்பிக்கப்பட்டது.
குளச்சல் துறைமுகத்தை எவ்வாறு அமைப்பது என்பது சம்பந்தமாக, விரிவடைந்த திட்டம் சம்பந்தமாக அறிக்கையை கேட்டு உலகளாவிய டெண்டர் விடப்பட்டது. அது தற்போது எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் உள்ளது.
குமரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளில் பிரதானமான குளச்சல் வர்த்தக துறைமுகம் அமைந்தால் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்கள் பெருகும். இதனால் மாவட்டம் செல்வ செழிப்பாக மாறும். எனவே மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்து குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்க கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின், செயலாளர் என்.முருகேசன், கண்ணன், புஷ்பதாஸ், ஆறுமுகம்பிள்ளை, புவனேந்திரன், மரிய ஜெயந்தன், ஜெயகுமார் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: குருந்தகோடு வட்டார மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட், மணவாளக்குறிச்சி
0 Comments: