Headlines
Loading...
மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி இல்லத்திருமண விழா டிசம்பர் 29-ம் தேதி நடக்கிறது: முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்

18-12-2014
மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவியாக ஜோஸ்பின் ரீட்டா என்பவர் இருந்து வருகிறார். இவருடைய கணவர் ஏ.இராஜசேகர் மணவாளக்குறிச்சி பேரூராட்சியில் முன்னாள் தலைவராக இருந்து வந்தார்.
இந்த தம்பதியினருக்கு 1 மகளும், 2 மகன்களும் உள்ளனர். இதில் மகள் எஞ்சினியரிங் படிப்பில் பட்டமேற்படிப்பு படித்து, ஸ்டெல்லா மேரீஸ் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், குளச்சல் திருவள்ளுவர் சாலை பகுதியை சேர்ந்த செல்லப்பன்-பிரிஜிட் மேரி தம்பதியினரின் மகன் எட்வின் பிரைட் என்பவருக்கும் திருமணம் வருகிற 29-ம் தேதி நடைபெறுகிறது.
திருமண நிகழ்ச்சி மணவாளக்குறிச்சி, சின்னவிளை புனித அந்தோணியார் ஆலயத்தில் வைத்து நடைபெறுகிறது. தொடர்ந்து மணவிருந்து கே.எஸ்.வி. ஆடிட்டோரியத்தில் வைத்து நடைபெறுகிறது. திருமண விழாவுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், தனியார் நிறுவன நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். திருமண விழா ஏற்பாடுகளை மணவாளக்குறிச்சி பேரூராட்சி முன்னாள் தலைவர் இராஜசேகர் – ஜோஸ்பின் ரீட்டா தம்பதியினர் செய்து வருகின்றனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: