Manavai News
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல மையவாளிக்கு சுற்றுசுவர் கட்டும்பணி: நிதி ஒதுக்கீடு செய்து, பிரின்ஸ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல மையவாளிக்கு சுற்றுசுவர் கட்டும்பணி: நிதி ஒதுக்கீடு செய்து, பிரின்ஸ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
17-12-2014
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்லத்திற்கு சொந்தமான மையவாளி, பள்ளிரோட்டில் இருந்து ஆறான்விளை செல்லும் சாலையில் உள்ளது. இதற்கு சுற்றுசுவர் கட்ட முஹல்லத் தலைவர் ஹல்ஃபா பஷீர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதன் பயனாக குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், சுற்றுசுவர் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதை தொடர்ந்து மையவாளிக்கு சுற்றுசுவர் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா 13-ம் தேதி சனிக்கிழமை அன்று மாலையில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். பிரின்ஸ் எம்எம்ஏ சுற்றுசுவர் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் குளச்சல் காங்கிரஸ் தொழிற்சங்கத் தலைவர் ஜலாலுதீன், மணவை சன் ஸ்டுடியோ அய்யூப், பாம்பே டெக்ஸ் முஸ்தபா கமால், குற்றாலம், அப்துல் சலாம் உள்பட மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் முஹல்லத் தலைவர் ஹல்ஃபா பஷீர் நன்றி தெரிவித்தார்.
0 Comments: