Headlines
மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு அக்டோபர் 17-ல் உள்ளாட்சி தேர்தல்

மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு அக்டோபர் 17-ல் உள்ளாட்சி தேர்தல்

மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு அக்டோபர் 17-ல் உள்ளாட்சி தேர்தல்

தமிழக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம்(அக்டோபர்) 17 மற்றும் 19–ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. குமரி மாவட்டத்திலும் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக வருகிற 17–ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் (அடைப்புக்குறிக்குள் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் உட்பட்ட கிராம பஞ்சாயத்துகள் கொடுக்கப்பட்டுள்ளன), பேரூராட்சிகள், நகராட்சிகள் விவரம் வருமாறு:–

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் (இரவிபுதூர், கரும்பாட்டூர், கோவளம், லீபுரம், மகாராஜபுரம், நல்லூர், வடக்கு தாமரைக்குளம், பஞ்சலிங்கபுரம், ராமபுரம், சுவாமிதோப்பு, தேரேகால்புதூர், குலசேகரபுரம்). கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் (இனயம்புத்தன்துறை, கொல்லஞ்சி, மத்திகோடு, மிடாலம், முள்ளங்கினாவிளை, நட்டாலம், பாலூர், திப்பிரமலை),

குருந்தங்கோடு ஊராட்சி ஒன்றியம் (குருந்தங்கோடு, முட்டம், சைமன்காலனி, தலக்குளம், தென்கரை, கக்கோட்டுதலை, கட்டிமாங்கோடு, நெட்டாங்கோடு, வெள்ளிச்சந்தை). முன்சிறை ஊராட்சி ஒன்றியம் (அடைக்காகுழி, முன்சிறை, பைங்குளம், தூத்தூர், விளாத்துறை, வாவறை, சூழால், குளப்புறம், மங்காடு, மெதுகும்மல், நடைக்காவு).

ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் (புத்தேரி, தர்மபுரம், கணியாகுளம், கேசவன்புத்தன்துறை, பறக்கை, ராஜாக்கமங்கலம், ஆத்திக்காட்டுவிளை, இலவுவிளை, மணக்குடி, மேலகிருஷ்ணன்புதூர், மேலசங்கரன்குழி, பள்ளம்துறை). இந்த 5 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு முதல்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளன.

பேரூராட்சிகளில் முதல் கட்டமாக அகஸ்தீஸ்வரம், ஆளூர், அஞ்சுகிராமம், அழகப்பபுரம், ஏழுதேசம், கணபதிபுரம், கல்லுக்கூட்டம், கன்னியாகுமரி, கருங்கல், கீழ்குளம், கிள்ளியூர், கொல்லங்கோடு, கொட்டாரம், மணவாளக்குறிச்சி, மருங்கூர், மயிலாடி, மண்டைக்காடு, நல்லூர், நெய்யூர், பாலப்பள்ளம், புதுக்கடை, புத்தளம், ரீத்தாபுரம், சுசீந்திரம், தென்தாமரைக்குளம், தெங்கம்புதூர், தேரூர், திங்கள்நகர், உண்ணாமலைக்கடை, வெள்ளிமலை, வில்லுக்குறி ஆகிய 31 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கும் தேர்தல் நடக்கிறது. குளச்சல், குழித்துறை ஆகிய 2 நகராட்சிகளின் வார்டு கவுன்சிலர்கள் பதவிகளுக்கும் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

2–வது கட்டமாக வருகிற 19–ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் (அடைப்புக்குறிக்குள் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் உட்பட்ட கிராம பஞ்சாயத்துகள் கொடுக்கப்பட்டுள்ளன), பேரூராட்சிகள், நகராட்சிகள் விவரம் வருமாறு:– மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் (மலையடி, மஞ்சாலுமூடு, புலியூர்சாலை, வன்னியூர், விளவங்கோடு, தேவிகோடு, மாங்கோடு, மருதங்கோடு, முழுக்கோடு, வெள்ளாம்கோடு),

திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் (பேச்சிப்பாறை, அருவிக்கரை, பாலமோர், கண்ணனூர், சுருளக்கோடு, ஏற்றக்கோடு, அயக்கோடு, செறுகோல், காட்டாத்துறை, குமரன்குடி), தோவாளை ஊராட்சி ஒன்றியம் (திருப்பதிசாரம், மாதவலாயம், பீமநகரி, தெரிசனங்கோப்பு, ஈசாந்திமங்கலம், கடுக்கரை, காட்டுப்புதூர், தெள்ளாந்தி, திடல், அருமநல்லூர், செண்பகராமன்புதூர், இறச்சகுளம், ஞாலம், சகாயநகர், தடிக்காரன்கோணம், தோவாளை),

தக்கலை ஊராட்சி ஒன்றியம் (ஆத்திவிளை, கல்குறிச்சி, மருதூர்குறிச்சி, திக்கணங்கோடு, சடையமங்கலம், முத்தலக்குறிச்சி, நுள்ளிவிளை) ஆகிய 4 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளன.

இதேபோல் ஆரல்வாய்மொழி, அருமனை, ஆற்றூர், அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி, இடைக்கோடு, இரணியல், கடையால், களியக்காவிளை, கப்பியறை, கோதநல்லூர், குலசேகரம், குமாரபுரம், முளகுமூடு, பாகோடு, பழுகல், பொன்மனை, தாழக்குடி, திற்பரப்பு, திருவட்டார், திருவிதாங்கோடு, வாழ்வச்சகோஷ்டம், வேர்கிளம்பி, விளவூர் ஆகிய 24 பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கும், நாகர்கோவில், பத்மநாபபுரம் நகரசபை வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கும் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளன.

இத்தகவலை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ளார்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

Related Articles

0 Comments: