
Events
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நடந்தது
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நடந்தது
07-03-2015
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில் 6-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு 12 மணிக்கு மஹாபூஜை என்னும் வலியபடுக்கை பூஜை நடைபெற்றது. இந்த பூஜை மாசி திருவிழாவின் 6-ம் நாள் விழா, மீனபரணி கொடைவிழா, கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டும் நடத்தப்படும். பூஜையில் அம்மனுக்கு அவல், பொரி, திரளி, தேன், கற்கண்டு, முந்திரி, சர்க்கரை, பச்சரிசி, தேங்காய், பழவகைகள், இளநீர், பாயாசம், கரும்பு, அப்பம் போன்ற உணவு பதார்க்கங்கள் படைக்கப்பட்டன.
நேற்று காலை 4.30 மணிக்கு திருக்கோவில் நடைதிறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு பஞ்சாபிஷேகமும், காலை 6.30 மணிக்கு தீபாராதனையும், காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடைபெற்றது.

மாநாட்டு பந்தலில் காலை 8 மணிக்கு பக்தி இன்னிசையும், காலை 10 மணிக்கு மகாபாரதம் தொடர் விளக்க உரையும், பகல் 12 மணிக்கு பக்தி பூஜையும், நண்பகல் 2 மணிக்கு மாதவிளை கண்ணதாசன் கலை இலக்கிய பேரவை வழங்கிய சிந்தனை சொல்லரங்கம் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு கதாகலாஷேபம் மற்றும் இன்னிசையும், இரவு 8 மணிக்கு சமய மாநாடும், இரவு 10 மணிக்கு கைரளி டிவி காந்தர்வ சங்கீதம் விருதுபெற்ற அபிலாஷ் வழங்கிய மாபெரும் கர்நாடக இன்னிசை நிகழ்வும் நடைபெற்றது.
0 Comments: