Events
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 9-ம் நாள் (12-03-2012)திருவிழா நிகழ்ச்சிகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
9-ம் நாள் (12-03-2012)திருவிழா நிகழ்ச்சிகள்
13-03-2012
காலை 5 மணி முதல் 8 மணி வரை பக்தி பாடல்கள் பாடப்பட்டன. காலை 8 மணி முதல் 9 மணி வரை "இராமாயண தொடர் விளக்க உரை" நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9 மணி முதல் 10.30 மணி வரை மணவாளக்குறிச்சி பிள்ளையார்கோவில் வள்ளலார் மன்ற குருஜி B.ஆனந்தேஸ்வரி குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.
குருஜி ஆனந்தேஸ்வரி குழுவினரின் பஜனை நிகழ்ச்சி |
காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சமய மாநாடு நடைபெற்றது. ஒய்வு பெற்ற கைத்தறி மற்றும் துணிதுறை துணை இயக்குநர் R. செல்லப்பன் தலைமை தாங்கினார். உரைப்பனவிளை சரல் இசக்கியம்மன் கோவில் சமயவகுப்பு மாணவிகள் செல்வி. T.K.பிரபா மற்றும் செல்வி R.நிஷா ஆகியோர் இறைவணக்கம் வழங்கினார். ஹைந்தவ சேவா சங்க செயற்குழு உறுப்பினர் C.திரவியம் முன்னிலை வகித்தார். "சைவ சிந்தாந்த சாஸ்த்திரம்' என்ற தலைப்பில் சுசீந்திரம் பேராசிரியர் Dr.S.P.சண்முகம் அவர்களும், "இராம ராஜ்ஜியம்" என்ற பொருளில் நாகர்கோவில் என்.ஜி.ஓ. கூட்டுறவு சங்கங்களின் ஒய்வு பெற்ற பதிவாளர் R.சந்திரசேகரன் மற்றும் சுசீந்திரம் C.தங்கசுவாமி ஆகியோரும், "நலம் தரும் யோகா" என்ற தலைப்பில் குளச்சல் களிமார் V.இராமராஜ் அவர்களும் சிறப்பு சொற்பொழிவு வழங்கினர். கல்குறிச்சி T.பாலையா நன்றி தெரிவித்தார்.
காலையில் நடைபெற்ற சமய மாநாடு நிகழ்ச்சி |
நாஞ்சில் சகாதேவன் குழுவினரின் வில்லிசை கச்சேரி |
வில்லிசை கச்சேரி வீடியோ காட்சி
பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை இலங்கம் நெய்யூர் சரல்விளை அம்மன் ஆலய பஜனை குழுவினரின் "பஜனை" நிகழ்ச்சி நடைபெற்றது. பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6 மணி வரை டிவி, ரேடியோ புகழ் நாஞ்சில் P. சகாதேவன் குழுவினரின் "திருஞான சம்மந்தர் வரலாறு" என்ற தலைப்பில் வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை சமய மாநாட்டு நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வைகுண்டபுரம் ஹைந்தவ சேவா சங்க செயற்குழு உறுப்பினர் C.மணி தலைமை தாங்கினார். முன்னிலை Dr.P.சுயம்பு வழங்கினார். காட்டுவிளை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் சமயவகுப்பு மாணவிகள் T.ரெம்யா மற்றும் K.சுசீலா ஆகியோர் இறைவணக்கம் பாடினர். "இராம அவதாரம்" என்ற தலைப்பில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் Dr.K.B. முத்துசுவாமி அவர்களும், அடியார் பெருமை என்ற தலைப்பில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பேராசிரியர் Dr.கு.கதிரேசன் அவர்களும் சிறப்பு சொற்பொழிவு வழங்கினர். ஹைந்தவ சேவா சங்க பொதுசெயலாளர் A.ரெத்தினபாண்டியன் நன்றி கூறினார். விழாவில் ஏழை விதவை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. மேலும் ஒரு ஏழை குழந்தைக்கு திருமண வைப்பு நிதி வழங்கப்பட்டது.
ஏழை பெண்களுக்கு வழங்கப்பட உள்ள தையல் இயந்திரங்கள் |
நலத்திட்ட உதவிகள் பெற வரிசையில் நிற்கும் பெண்கள் |
ஒரு பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது |
நலத்திட்ட உதவிகள் பெறும் பெண்கள்
இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பெரிய தீவெட்டி அலங்கார பவனி வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசரித்தனர்.
பெரிய தீவெட்டி பவனியை காண காத்திருக்கும் பக்தர்கள் |
பழங்கள் படைக்கப்பட்டு தீபாராதணை செய்யப்படும் காட்சி |
பெரிய தீவெட்டி ஊர்வலத்தை காண குவிந்த பக்தர்கள் |
செண்டைமேள காட்சி |
பெரிய தீவெட்டி ஊர்வல காட்சிகள் |
பெரிய தீவெட்டி ஊர்வல வீடியோ - 1
பெரிய தீவெட்டி ஊர்வல வீடியோ - 2
பெரிய தீவெட்டி ஊர்வல வீடியோ - 2
பெரிய தீவெட்டி ஊர்வல வீடியோ - 3
பெரிய தீவெட்டி ஊர்வல வீடியோ - 4
பெரிய தீவெட்டி ஊர்வல வீடியோ - 5
இரவு 11 மணி முதல் குமரி ரெத்ன பிரியா இசைக்குழு வழங்கும் இந்து சமய தத்துவ விளக்கத்துடன் 'சிந்தனை சிரிப்பு பக்தி இன்னிசை பாட்டுமன்றம்" நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இன்னிசை பாட்டுமன்ற சக்கரவர்த்தி நகைச்சுவை மன்னர் நாவுக்கரசு, முத்தமிழ் வித்தகர் "குமரி கண்ணன்' அவர்கள் நடுவராக இருந்தார். "பாரத பண்பாட்டு நெறியில் எந்த காலம் பொற்காலம்" எந்த தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற சமய மாநாடு நிகழ்ச்சி |
குமரி கண்ணன் அவர்களின் நகைச்சுவை பாட்டுமன்ற காட்சி |
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள செடிகள் |
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள செடிகள் சிறப்பு காட்சி
0 Comments: