Headlines
Loading...
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில்  8-ம் நாள் (11-03-2012) திருவிழா நிகழ்ச்சிகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் 8-ம் நாள் (11-03-2012) திருவிழா நிகழ்ச்சிகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் 
8-ம் நாள் (11-03-2012) திருவிழா நிகழ்ச்சிகள்

12-03-2012
     மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் 8-ம் நாள் திருவிழா நிகழ்ச்சிகள் 11-03-2012 அன்று நடைபெற்றது. காலை 5 மணி முதல் 8 மணி வரை பக்தி பாடல்கள் பாடப்பட்டது. காலை 8 மணி முதல் 10 மணி வரை "இராமாயணம் தொடர் விளக்க உரை" நிகழ்ச்சி நடைபெற்றது. 

மாநாட்டு பந்தலில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தையும்
நடத்தும் ஹைந்தவ (இந்து) சேவா சங்க (வலமிருந்து)
தலைவர் V.கந்தப்பன், செயலாளர் R.முருகன், பொதுசெயலாளர்
A.ரெத்தினபாண்டியன், பொருளாளர் K.சசீதரன் 
மாநாட்டு பந்தலில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும்
ஒருங்கிணைத்து நடத்தும் ஹைந்தவ சேவா சங்க
செயற்குழு உறுப்பினர் C.திரவியம் 
      காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை "சொற்பொழிவு போட்டிகள்" நடைபெற்றன. ஹைந்தவ சேவா சட்ட ஆலோசகர் S.ராஜரெத்தினம் தலைமை வகித்தார். புல்லுவிளை முத்தாரம்மன் கோவில் சமயவகுப்பு மாணவிகள் K.விஜயராணி மற்றும் R.பிறிதா ஆகியோர் இறைவணக்கம் வழங்கினர். முன்னுரையை தலைவர் நிகழ்த்தினார். சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு நடுவர்களாக, தூத்துக்குடி காமராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரிவுரையாளர் K.ஹெமரணா அவர்களும், கண்டன்விளை அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் P.முருகன் அவர்களும், அருப்புகோட்டை ஆசிரியர் ஆ.சுப்பிரமணியன் அவர்களும், உரப்பனவிளை A.பாலசுப்பிரமணியன் அவர்களும் இருந்தனர்.

மாநாட்டு சொற்பொழிவு நடைபெற்ற காட்சி 
      பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை "பக்தி கானமேளா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை திருவனந்தபுரம் கே.சி.மெமோரியல் பள்ளி முதல்வர் திருமதி. ராதிகா சுந்தரேசன் மற்றும் குழுவினர் நடத்தினர். மாலை  4.30 மணி முதல் 6.30 மணி வரை தக்கலை ஸ்ரீ பார்த்தசாரதி ஆலயம் ஹரே கிருஷ்ண இயக்கம் நடத்திய "மாபெரும் ஹரிநாம கீர்த்தனம் மற்றும் சத்சங்கம்" நடைபெற்றது. மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை "அகிலத்திரட்டு விளக்க உரை" நிகழ்ச்சியை தக்கலை அய்யாவழி பக்தர்கள் அமைப்பு N.முருகன் நிகழ்த்தினார். அகிலத்திரட்டு வாசித்தவர்கள் சிராயன்விளை N.முருகன், அம்மாண்டிவிளை ராமர், உடையார்விளை A.ஜெனதன் ஆகியோர் ஆவார்கள். நன்றியுரை கீழ்க்கரை ஹைந்தவ சேவா சங்க உறுப்பினர் இராமதாஸ் கூறினார்.

இரவு 8 மணிக்கு நடைபெற்ற சமய மாநாட்டில் இறைவணக்கம்
பாடிய சமயவகுப்பு மாணவிகள் 
சமய மாநாட்டில் ஹைந்தவ சேவா சங்க தலைவர்
வி.கந்தப்பன் தலைமை தாங்கினார் 
அய்யா வழி பக்தர்களுக்கு நேர்ச்சை வழங்கிய காட்சி 
விழா பந்தலில் நிகழ்ச்சிகளை கான குவிந்துள்ள பக்தர்கள் 
கோவிலை சுற்றி அம்மன் தரிசனம் செய்யும் பக்தர்கள் 
செண்டை மேளம் முழங்க களியாட்டம்
களியாட்டம் வீடியோ காட்சி 

மங்காரத்தில் இருந்து மண்டைக்காடு வந்த ஊர்வலம் 


பொங்கலிட்டு வழிபடும் கேரள பக்தர்கள் 
தோப்புகளில் சமைத்து சாப்பிடும் பக்தர்கள் 
மாலை நேரம் லேசான மழை பொழிந்ததால்
சில பக்தர்கள் குடை பிடித்து கொண்டு சென்றனர் 

      இரவு 8 மணி முதல் 12 மணி வரை சமய மாநாடு நடைபெற்றது. நாகர்கோவில் A.இராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சன்,சூரிய தொழில் நுட்ப பொறியியல் கல்லூரி தலைவர் Er. C.தயாபரன் முன்னிலை வகித்தார். வெள்ளிமலை பாலசுப்பிரமணிசாமி கோவில் சமயவகுப்பு மாணவிகள் K.காயத்ரி மற்றும் K.அன்புக்கொடி இறைவணக்கம் பாடினர். "அம்பிகை பேரருள்" என்ற தலைப்பில் தூத்துக்குடி வாரியார் விருது பெற்ற இன்னிசை சொல்லரசி வாசுகி மனோகரன் அவர்களும், "ஹைந்தவ சேவகம்" என்ற தலைப்பில் வில்லுக்குறி சேவாபாரதி தலைவர் வி.ஆர்.தெய்வபிரகாஷ் அவர்களும், "மூவரசர்கள் போற்றிய நாவரசர்" என்ற தலைப்பில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர்.இ.போன்னுலிங்கம் அவர்களும் சொற்பொழிவு வழங்கினர்.

பக்தர்கள் கூட்டம் வீடியோ - 1

பக்தர்கள் கூட்டம் வீடியோ - 2

பக்தர்கள் கூட்டம் வீடியோ - 3

      இரவு 12 மணி முதல் 37 வருட இசை சாதனை புரிந்த மெல்லிசை மன்னன்  Lion தக்கலை சிவா வழங்கிய "மாபெரும் பக்தி மெல்லிசை" விருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மணவாளக்குறிச்சி K.S.V. திருமண மண்டப உரிமையாளர் அவர்கள் உபயமாக வழங்கினார்.

தக்கலை சிவா நடத்திய பக்தி மெல்லிசை 
பக்தி மெல்லிசை வீடியோ காட்சி 

மண்டைக்காடு கோவிலை சுற்றி நடந்த காட்சிகள் 
திருவிழாவிற்கு குடும்பமாக வந்தவர்கள் மதியம் உணவு
சமைத்து உண்பர். அதற்காக மீன் வெட்டும் குடும்ப தலைவர் 
பெண்கள் சமையலுக்காக காய்கறிகள் நறுக்கும் காட்சி 
சாப்பிடும் ஒரு குடும்பம் 
சாதம் தயாராகிக்கொண்டிருக்கிறது 
கோழி விற்பனை படுஜோராக நடக்கும் காட்சி 
வியாபாரத்திற்காக முளைகள் வைக்கப்பட்டுள்ளது 
கடற்கரை சாலையில் மக்கள் வெள்ளம 
மோர் விற்கும் பெண் 
கடற்கரை பாதுகாப்பு போலீசார் 
கடற்கரையில் குவிந்த பொதுமக்களும் பாதுகாப்பு போலீசாரும் 
பேரூராட்சி அதிகாரி சாமி மேற்பார்வையிடும் காட்சி 
கடற்கரை புறக்காவல் நிலையம் 
கடல் அலையில் கால் நனைக்கும் பெண்கள் 

கடற்கரையில் குவிந்த கூட்டம் 
கடற்கரைக்கு செல்லும் பக்தர்கள் 
"திருடர்கள் ஜாக்கிரதை"  போலீசாரால் வைக்கப்பட்டுள்ள
VIP க்களின் போட்டோஸ். பெண்களும் சளைத்தவர்கள் அல்ல
மண்டைக்காடு கோவிலை சுற்றிய பகுதிகளில் குவியும்
பொருட்களை உடனே அகற்ற தயார் நிலை வண்டி 
கையில் பச்சை குத்தும் இளைஞர் 
குவிந்த கூட்டம் 
தயார்நிலை தீயணைப்பு வண்டி 


We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: