Headlines
மணவாளக்குறிச்சியில் அதிமுக ஊழியர் கூட்டம் நடைபெற்றது

மணவாளக்குறிச்சியில் அதிமுக ஊழியர் கூட்டம் நடைபெற்றது

மணவாளக்குறிச்சியில் அதிமுக ஊழியர் கூட்டம் நடைபெற்றது
30-03-2014
மணவாளக்குறிச்சி பீச் ரோட்டில் உள்ள எரோணிமூஸ் காம்பவுண்ட் வளாகத்தில் வைத்து அதிமுக ஊழியர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் ஜாண் தங்கம் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றியடைய செய்வதற்காக, கழக தோழர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பணிகளை கருத்தில் கொண்டு இந்த ஊழியர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சிவசெல்வராஜன் தலைமை தாங்கி தேர்தல் பணி குறித்து பேசினார். ஒன்றிய செயலாளர் அசோகன், மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா, முன்னாள் தலைவர் இராஜசேகர், மாவட்ட மீனவரணி துணைத்தலைவர் எரோணிமூஸ், பேரூர் செயலாளர் கண்ணதாசன், ஹல்பா பஷீர், எம்எஸ்எம் பஷீர், சேமக்கண், வார்டு உறுப்பினர் அப்துல் சலாம், ஆஸ்டின், புதியபுயல் முருகன் உள்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.


போட்டோஸ்
மணவை முருகன்

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: