சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒரு வழிப்பாதையை அகற்றக்கோரி கடைகள் அடைப்பு, ஊர்வலம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒரு வழிப்பாதையை அகற்றக்கோரி கடைகள் அடைப்பு, ஊர்வலம்
07-03-2015
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மண்டைக்காடு கோவிலில் ஒருவழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே ஒரு வழிப்பாதையை அகற்ற வலியுறுத்தி மண்டைக்காடு பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமையில் துணைத்தலைவர் ஜெகன்சந்திரகுமார் மற்றும் 11 கவுன்சிலர்கள் 2-வது நாளாக விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அதன்பின்னர் நேற்று மதியம் 1 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு விட்டு கோவில் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜனதா கட்சியினரும், இந்து முன்னணியினரும், பக்தர்களுக்கும் அங்கு திரண்டனர். பின்னர் பேரூராட்சி அலுவலகத்தின் முன் இருந்து ஊர்வலமாக சென்றனர். மணலிவிளை பகுதியில் ஊர்வலம் வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு வரும்படி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பத்மநாபபுரம் கோட்டாட்சியர் அருண்சத்யா, கல்குளம் தாசில்தார் சிந்து, குளச்சல் போலீஸ் உதவி சூப்பிரண்டு கங்காதர், போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு இளங்கோ, கிராமநிர்வாக அதிகாரி தாரணி மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்களிடம் பேரூராட்சி தலைவி மகேஷ்வரி முருகேசன், பா.ஜனதா மாவட்ட தலைவர் கணேசன், பொதுச்செயலாளர் குமரி ரமேஷ், இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசாசோமன், மாநில செயற்குழு உறுப்பினர் குழிச்சல் செல்லன், ஒன்றிய தலைவர் கிருஷ்ணதாஸ் உள்பட பலர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கோவிலை சுற்றி வருவதற்கு மட்டும் அனுமதிக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு போராட்டக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருவழிப்பாதையை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். மேலும், ஒரு வழிப்பாதையை அகற்றக்கோரி மண்டைக்காட்டில் உள்ள கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பொருட்கள் எதுவும் வாங்க முடியாமல் தவிப்புக்கு உள்ளானார்கள்.
0 Comments: