
மணவை செய்திகள்
மணவாளக்குறிச்சியில் திருநபி தினவிழா - நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி
மணவாளக்குறிச்சியில் திருநபி தினவிழா
நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி
25-01-2013
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்லம் சார்பில் மிலாது நபி திருநாள் விழா இன்று (25-01-2013) கொண்டாடப்படுகிறது. திருநாளை முன்னிட்டு மணவாளக்குறிச்சி பாப்புலர் ஆடிட்டோரியத்தில் வைத்து காலை 7.30 மணி முதல் நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது.
இந்நிகழ்ச்சியில் மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல தலைவர் பசீர், செயலாளர் நூருல் அமீன், பொருளாளர் அப்துல் சமது மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அப்துல் காதர், முஹம்மது முபீன், சபீக் ரகுமான், சாதிக், பதர்ஸமான் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நேர்ச்சை வழங்குவதற்கான முன்னேற்பாடுகளில் மணவாளக்குறிச்சி இஸ்லாமிய இளைஞர் பேரவை நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் பங்குபெற்றனர். நேர்ச்சையை முஹல்ல மக்கள் வாங்கி சென்றனர்.
![]() |
நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி துவங்கி வைக்கும் முஹல்ல செயலாளர் நூருல் அமீன் |
![]() |
முதல் நேர்ச்சை வழங்கப்பட்ட காட்சி |
![]() |
நேர்ச்சை வாங்க வரிசையில் நின்ற இஸ்லாமியர்கள் |
நேர்ச்சை வழங்குதல் தொடர்பான ஏராளமான போட்டோ தகவல்களுக்கு...
0 Comments: