Ladies Special
பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு
பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
24-01-2013
குளச்சல் மகளிர் போலீஸ் நிலையம் சார்பில் அகில இந்திய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி குளச்சல் வி.கே.பி.பள்ளி மைதானத்தில் இருந்து தொடங்கியது. பேரணியை குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதில் குளச்சல் வி.கே.பி. பள்ளி மற்றும் புனித மரியன்னை பள்ளியை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிசில், சப்–இன்ஸ்பெக்டர் பரசுராமன், இஸ்மாயில் மற்றும் பள்ளி ஆசிரியைகள் உள்பட பலர் பங்கேற்றனர். பெண்கள் நாட்டின் கண்கள், பெண் சிசுக்களை கொல்லாதே என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியில் பங்கேற்றவர்கள் எடுத்து வந்தனர். இந்த பேரணி குளச்சல் அண்ணாசிலை, காமராஜர் பஸ்நிலையம் வழியாக சென்றது.
0 Comments: