மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
8-ம் கொடை விழா நடைபெற்றது
21-03-2012
குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாக விளங்குவது மண்டைக்காடு அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கொடை விழா சிறப்புடன் நடைபெறும். இந்த ஆண்டு மாசி கொடை விழா கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி துவங்கி 13-ம் தேதி முடிவுற்றது.
|
எட்டாம் கொடையன்று அம்மனை தரிசிக்க வந்த பக்தர்கள் |
|
அம்மனை வழிபட வரிசையில் நிற்கும் பக்தர்கள் |
|
பொங்கலிடும் பக்தர்கள் |
கோவில் 8-ம் கொடை விழா 20-03-2012 அன்று நடைபெற்றது. அன்று அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வரத்தொடங்கினர். கேரள பக்தர்களும் அதிக அளவில் வரத்தொடங்கினர். அவர்கள் கோவில் அருகாமையில் அமைந்துள்ள பொங்கலிடும் பந்தலில் பொங்கலிட்டு வழிபட்டனர். பக்தர்கள் கோவிலை சுற்றுயுள்ள பகுதிகளில் மீன் மற்றும் கோழி போன்றவைகள் வைத்து சமையல் செய்தனர்.
பொங்கலிட்டு வழிபடும் கேரள பக்தர்கள்
|
வெடி வழிபாடு செய்யப்படும் இடம் |
|
பக்தர்களின் கூட்டத்தின் ஒரு பகுதி |
|
எட்டாம் கொடையை முன்னிட்டு சிறப்பு கோழி கடை
அமைக்கப்பட்டிருந்தது |
|
தற்காலிக மீன் கடை |
|
சமையல் செய்யும் குடும்பங்கள் |
|
உணவருந்தும் ஆண்கள் |
8-ம் கொடையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக சார்பில் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டிருந்தது. இதனால் மக்களுக்கு மண்டைக்காடு வருவது மிகவும் சுலபமாக இருந்தது. பக்தர்கள் அம்மனை வழிபட்டு, பின்னர் கடற்கரைக்கு சென்றனர். கடற்கரையிலும் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் பாதுகாப்பிற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
0 Comments: