
Manavai News
மணவாளக்குறிச்சி நகர SDPI சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது
மணவாளக்குறிச்சி நகர SDPI சார்பில்
சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது
15-08-2013
மணவாளக்குறிச்சி நகர SDPI (Social Democracy Peaple of India) சார்பில் 67-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. காலை 9 மணி அளவில் மணவாளக்குறிச்சி பீச்ரோடு, பள்ளிவாசல் அருகே தேசிய கொடி ஏற்றப்பட்டது.
மணவாளக்குறிச்சி நகர எஸ்.டி.பி.ஐ. தலைவர் சாதிக் தேசிய கொடியை ஏற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ஜப்பார், பொது செயலாளர் சலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மணவாளக்குறிச்சி நகர துணை தலைவர் பகதூர் ஷா, செயலாளர் நவுசாத், பொருளாளர் காசிம், கிளை தலைவர் சபீக் ரகுமான், அனீப் ரஹ்மான் மற்றும் உறுப்பினர்கள், முஸ்லிம் முஹல்ல நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்று விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அனைவரும் சுதந்திர நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
0 Comments: