Manavai News
மணவாளக்குறிச்சி, பிள்ளையார்கோவிலில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு யானை மீது சந்தன குடம் பவனி
மணவாளக்குறிச்சி, பிள்ளையார்கோவிலில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு யானை மீது சந்தன குடம் பவனி
07-11-2014
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி விழாவையொட்டி காலையில் பஞ்சாபிஷேகம், உஷபூஜை, மதியம் தீபாராதனை ஆகியவை நடந்தது. மாலையில் மணவாளக்குறிச்சி, பிள்ளையார்கோவில் ஊர் முத்தாரம்மன் கோவிலில் இருந்து யானை மீது சந்தனகுடம் பவனி நடந்தது. இந்த பவனி பரப்பற்று, கூட்டுமங்கலம் வழியாக மண்டைக்காட்டிற்கு வந்தது.
பின்னர் மாலையில் திருவிளக்கு பூஜையும், அலங்கார தீபாராதனையும், இரவில் நையாண்டிமேளமும், சிறப்பு தீபாராதனையும், வாணவேடிக்கையும் நடந்தது. விழா ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். கரயோக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
0 Comments: