
Manavai News
மணவாளக்குறிச்சி பகுதிகளில் சுதந்திர தினவிழா: தேசிய கொடியேற்றப்பட்டது
மணவாளக்குறிச்சி பகுதிகளில் சுதந்திர தினவிழா: தேசிய கொடியேற்றப்பட்டது
15-08-2015
இந்தியா முழுவதும் இன்று 69-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து மணவாளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று காலையில் மணவாளக்குறிச்சி காவல்நிலைய வளாகத்தில் சுதந்திரதின தேசிய கொடியை காவல்த்துறை ஆய்வாளர் ஆதிலிங்கபோஸ் ஏற்றினார். மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் பேரூராட்சி அலுவலகம் ஆகியவற்றில் பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா ஆகியோர் தேசிய கொடியை ஏற்றினர்.
பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய பேச்சு, பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா பரிசுகள் வழங்கினார். மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்லம் சார்பில் ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் முஹல்லத் தலைவர் ஹல்ஃபா பஷீர் தேசிய கொடியேற்றினார். ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் தேசிய கொடியேற்றப்பட்டது.
0 Comments: