
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு அருகே விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சாவு
மண்டைக்காடு அருகே விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சாவு
10-02-2016
மண்டைக்காடு அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 46). தொழிலாளி. இவருடைய மனைவி விமலா. சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் திங்கள்நகருக்கு சென்று விட்டு வீடு நோக்கி திரும்பினர். கல்லுக்கூட்டம் அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ராஜகோபால் பரிதாபமாக நேற்று இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ் பிள்ளை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
0 Comments: