
District News
நாகர்கோவிலில் மக்கள் கூட்டமைப்பு கட்சியின் தொடக்க விழா நடைபெற்றது
நாகர்கோவிலில் மக்கள் கூட்டமைப்பு கட்சியின் தொடக்க விழா நடைபெற்றது
07-02-2016
நாகர்கோவிலில் மக்கள் கூட்டமைப்பு கட்சியின் தொடக்கவிழா கடந்த மாதம் 26-ம் தேதி அகில இந்திய மக்கள் நல சங்கம் சார்பில் சுமங்கலி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
விழாவிற்கு கட்சியின் நிறுவனரும், பொது செயலாளருமான சிவகுமார் தலைமை தாங்கினார். மாநில தலைவர் கண்ணன், துணை தலைவர் சோபிராஜன், குமரி மாவட்ட தலைவர் வக்கீல் சதீஸ், மாவட்ட அவைத்தலைவர் ராபின்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருநாவுக்கரசு வரவேற்று பேசினார். வக்கீல் குகசீலரூபன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சாதி, மத வேறுபாடின்றி தமிழ் மக்களை ஒன்றிணைத்து முதல் மாநிலமாக்குவது, லஞ்சம் சுரண்டல் இல்லாத அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை உருவாக்குவது, அனைத்து தமிழ் மக்களும் பொருளாதார தன்னிறைவு பெறவும், மது இல்லாத தமிழகம், லோக்பால் மசோதாவை கொண்டுவரவும், இலவச கல்வி அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கவும், வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கவும், புதிய தொழிற்சாலைகள் தொடங்கவும், மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தி மற்றும் போட்டோஸ்
“புதிய புயல்” முருகன்,
“மணவை இன்ஃ போ” சிறப்பு செய்தியாளர்,
மணவாளக்குறிச்சி.
0 Comments: