
Manavai News
மணவாளக்குறிச்சியில் கடையடைப்பு: வாகனங்கள் வழக்கம் போல் ஓடின
மணவாளக்குறிச்சியில் கடையடைப்பு:
வாகனங்கள் வழக்கம் போல் ஓடின
03-08-2015
காந்தியவாதி சசிபெருமாள் இறப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் பல்வேறு கட்சியினர் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு அதிமுக, பாமக தவிர மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நேற்று மாலையில் மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று கடைகள் மூட சொல்லி ஆதரவு கேட்டனர். அதேபோல் அதிமுகவினர் கடைகளை திறக்க சொல்லி ஆதரவு கேட்டனர். இந்நிலையில் இன்று மணவாளக்குறிச்சி பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
டீ ஸ்டால், மெடிக்கல் ஸ்டோர் உள்ளிட்ட ஒருசில கடைகள் மட்டும் திறந்து இருந்தது. மீன் சந்தை வழக்கம்போல் செயல்பட்டது. பள்ளிகள் இயங்கின. ஆட்டோ, கார், வேன் ஆகியவை ஓடின. இதனால் காலை வேளை எப்போதும் போல் பரபரப்புடன் காணப்பட்டது. பேருந்துகளிலும் வழக்கம்போல் பயணியர் பயணம் செய்ததை காணமுடிந்தது.
0 Comments: