Manavai News
மணவாளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்புவிழா நடைபெற்றது
மணவாளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு விழா நடைபெற்றது
03-08-2015
தமிழக அரசின் உத்தரவுப்படி, பாலூட்டும் தாய்மார்களுக்கு வசதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று துவங்கி வைத்தார்.
இதைதொடர்ந்து மணவாளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தனி அறையை முதல்வர் திறந்து வைத்தபின்னர், மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவி ஜோஸ்பின் ரீட்டா, செயல் அலுவலர் தே.ரோ.லிசி, குருந்தன்கோடு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதீப் குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்.
மணவாளக்குறிச்சி சுகாதார ஆய்வாளர் போத்திராஜ், உதவி பொறியாளர் இரவின் ஜெயராஜ், பணி ஆய்வாளர் அசோகன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரகாசியாள், மரியஜெயந்தன், சகாயராஜ், மனோன்மணி, நிலோபர் நிஷா, ஸ்ரீகுமார், ராஜகுமார், திலகவதி, புஷ்கலா, குமார், ஐயப்பன், பகவதியப்பன், அப்துல் சலாம், ஆஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments: