
மணவை செய்திகள்
மணவாளக்குறிச்சி ஜும்ஆ பள்ளிவாசலில் திருநபி தினவிழா துவக்கம்
மணவாளக்குறிச்சி ஜும்ஆ பள்ளிவாசலில்
திருநபி தினவிழா துவக்கம்
19-01-2013
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல ஜும்ஆ பள்ளிவாசலில் திருநபி தினவிழா ஹிஜ்ரி வருடம் (1434) ரபிஉல் அவ்வல் முதல் நாள் (கடந்த 13-ம் தேதி) துவங்கி, இந்த மாதம் 25-ம் தேதி வரை நடக்கிறது.
![]() |
நேர்ச்சை வழங்கப்படும் காட்சி |
இந்த நாள்களில் தினமும் இரவு மவுலூது சரீப் ஓதுதலும், தொடர்ந்து நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வருகிற 25-ம் தேதி மிலாதுநபி திருநாள் அன்று மணவாளக்குறிச்சி பாப்புலர் ஆடிட்டோரியத்தில் வைத்து மாபெரும் நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு மதரசா மாணவ, மாணவிகள் பங்குபெறும் இஸ்லாமிய பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி போன்றவை நடைபெறுகிறது. தொடர்ந்து பரிசு வழங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
திருநபி தினவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல தலைவர் பஷீர், செயலாளர் நூருல் அமீன், பொருளாளர் அப்துல் சலாம், செயற்குழு உறுப்பினர்கள் முஹம்மது முபீன், காதர், பதர் சமான், சாதிக், சபீக் ரகுமான் உள்பட நிர்வாகிகள் செய்துள்ளனர்.
0 Comments: