
Announcements
மணவாளக்குறிச்சியில் பிளஸ் – 2 மாணவி தூக்குபோட்டு தற்கொலை
மணவாளக்குறிச்சியில்
பிளஸ் – 2 மாணவி தூக்குபோட்டு தற்கொலை
19-01-2013
மணவாளக்குறிச்சி அருகே உள்ள சின்னவிளை பகுதியை சேர்ந்தவர் சாந்தா ஹெலன். இவர் மணவாளக்குறிச்சி கால்நடை மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஆரோக்கிய திவ்யா ஷானு (வயது 17). இவர் மணவாளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்- 2 படித்து வந்தார்.
நேற்று ஆரோக்கிய திவ்யா ஷானுவின் தாயார் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆரோக்கிய திவ்யா ஷானு வீட்டு மாடியில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவாணி முத்து வழக்குபதிவு செய்து பிணத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அடிக்கடி கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
0 Comments: