
District News
குமரி மாவட்டத்தில் 40 மில்லி மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் ரூ.1 லட்சம் அபராதம்: கலெக்டர் தகவல்
குமரி மாவட்டத்தில் 40 மில்லி மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் ரூ.1 லட்சம் அபராதம்: கலெக்டர் தகவல்
07-08-2015
குமரி மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் 40 மில்லி மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்கான கண்காணிப்பு குழு கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டஅரங்கில் நடந்தது.
கூட்டத்துக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– குமரி மாவட்டதில் உள்ள 55 பேரூராட்சி பகுதிகளில் 40 மில்லி மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை முற்றிலுமாக தவிர்ப்பதற்காக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பேரூராட்சி செயல் அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள், மகளிர் திட்ட அதிகாரிகள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்டது.
கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி மாணவ–மாணவிகள் மூலம் தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களை தவிர்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் அதன் தீமைகள் குறித்து வாசகங்கள் அடங்கிய கையேடுகள், துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். மகளிர் திட்ட அதிகாரிகள் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போலீசாரும், வருவாய்துறை அதிகாரிகளும் பேரூராட்சி செயல் அதிகாரிகளை ஒருங்கிணைத்து வணிக நிறுவனங்களில் தரமற்ற பிளாஸ்டிக் விற்பதை சோதனை செய்ய வேண்டும்.
குமரி மாவட்டத்தில் வருகிற 15–ம் தேதிக்கு பிறகு வணிக நிறுவனங்களில் 40 மில்லி மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பது கண்டறிந்தால், அதனை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

0 Comments: