சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே கடலில் குதித்து பெண் தற்கொலை
மணவாளக்குறிச்சி அருகே கடலில் குதித்து பெண் தற்கொலை
20-07-2015
மணவாளக்குறிச்சி அருகே கொல்லன்விளை கடற்கரையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது சுமார் 45 வயது மதிக்க தக்க ஒரு பெண் கடற்கரைக்கு வந்தார். பிறகு திடீர் என்று அவர் ஆவேசத்துடன் கடலை நோக்கி விரைந்து சென்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் சிலர் அந்த பெண்ணை நோக்கி ஓடினார்கள். ஆனால் அதற்குள் அந்த பெண் கடல் தண்ணீரில் பாய்ந்து விட்டார். அப்போது ராட்சத அலைகள் எழுந்ததால் அந்த பெண்ணை கடல் அலை உள்ளே இழுத்து சென்றது.
உடனே இதுபற்றி கடலோர காவல்படை போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். கடலோர காவல்படை சப்–இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பிறகு மீனவர்களின் உதவியுடன் படகு மூலம் கடலில் மூழ்கிய அந்த பெண்ணை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில் அதே பகுதியில் கடற்கரையில் அந்த பெண்ணின் உடல் ஒதுங்கியது. இதைத் தொடர்ந்து கடலோர காவல்படை போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த பெண் யார்? எந்த ஊர்? எதற்காக கடலில் குதித்து தற்கொலை செய்தார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments: