
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு அருகே பெண்ணை மானபங்கபடுத்த முயற்சி: வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு
மண்டைக்காடு அருகே பெண்ணை மானபங்கபடுத்த முயற்சி: வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு
22-01-2015
மண்டைக்காடு அருகே உள்ள கருமன்கூடல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி பாப்பா (வயது 27). அதே ஊரை சேர்ந்த சரவணன் என்பவரும், கிருஷ்ணகுமாரும் ஒன்றாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தனர். சரவணன் ஊருக்கு வந்துள்ளார். சரவணன் பாப்பாவிடம் கிருஷ்ணகுமாரிடம் வேலை செய்ததில் அவர் பணம் தரவேண்டி உள்ளது. அதை உடனே எனக்கு தரவேண்டும் என்று கேட்டுள்ளார். இதில் பாப்பா பணத்தை பற்றி அவரிடம் கேளுங்கள் என்று கூறினார்.
இந்நிலையில் சம்பவத்தன்று பாப்பா மகளை கூட்டிகொண்டு வரும்போது, சரவணன் பாப்பாவின் சேலையை பிடித்து இழுத்து மானப்பங்கபடுத்த முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை அடித்ததாகவும் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து பாப்பா மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சோமன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
0 Comments: