
Manavai News
மணவாளக்குறிச்சி, சின்னவிளை புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு, பங்கு தந்தை வெளியிட்டுள்ள சிறப்பு செய்தி
மணவாளக்குறிச்சி, சின்னவிளை புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு, பங்கு தந்தை வெளியிட்டுள்ள சிறப்பு செய்தி
27-01-2015
மணவாளக்குறிச்சி, சின்னவிளை புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று முதல் (27-ம் தேதி) தொடங்கி பிப்ரவரி 08-ம் தேதி வரை 13 நாள்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, பங்கு தந்தை அருட்பணி பெஞ்சமின் போஸ்கோ வெளியிட்டுள்ள சிறப்பு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
![]() |
Fr. Benjamin Bosco |
2014 –ஆம் ஆண்டை குடும்ப ஆண்டாக கொண்டாடி நிறைவு செய்யும் இவ்வேளையில், திருவிழா அருளுரைகளின் மையசிந்தனைகள் குடும்ப வாழ்வை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளன. நமது திருத்தந்தை 30.11.2014 – 02.02.2016 –க்கு இடைபட்ட காலத்தை “அர்ப்பண வாழ்வு” ஆண்டாக அறிவித்திருக்கின்றார். அர்ப்பண வாழ்வு திருச்சபைக்கு இறைவனின் கொடை என்ற மையசிந்தனையோடு துறவறம் பூண்ட ஆண்களும், பெண்களும் தாகத்தோடு ஏழுஇகளுக்கு பணியாற்றுவதற்கான ஆர்வத்தில், கிறிஸ்துவை பின்பற்றும் ஆனந்தத்தை மீண்டும் கண்டுபிடிக்கும் படியாக... அர்ப்பண வாழ்வின் பேராயம் திருத்தந்தையோடு துறவிகளை இந்நேரம் நாமும் துரவறத்தாரை மனமார வாழ்த்துவோம்.
இந்த நல்லநேரத்தில் பிரான்சிஸ்கன் சபையின் புகழும், பெருமையுமான, அச்சபையின் துறவியும், பேரறிஞரும், மறைவல்லுனருமான புனித பதுவா அந்தோணியாரை எமது சின்னவிளை தளத்திருச்சபை பாதுகாவலராக பெற்றிருப்பது இறைவன் கொடுத்த வரமே.
இத்திருவிழாவின் புனித நாட்களிலே நாமும் நம் பார்வையை புனிதர் பக்கமாய் திருப்புவோம். பேதகம் தவிர்த்து உண்மையை உணருவோம். “கடவுளை அறியவும், அன்பு செய்யவும்” என்ற விருது வாக்கோடு வாழ்ந்த புனிதரை போன்று கடவுளுக்கும் கடவும் பணிக்கும் முதலிடம் அருள்வோம். திருவிழாவை காண வரும் பக்தகோடிகள் அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துக்கள்! புனிதரின் ஆசீர் உங்கள் அனைவருக்கும் நிறைவாக கிடைக்கப்பெரறுவதாக” இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
0 Comments: