
Manavai News
மணவாளக்குறிச்சி, சின்னவிளை கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
மணவாளக்குறிச்சி, சின்னவிளை கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
27-01-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள சின்னவிளை கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய பெருவிழா இன்று (27-ம் தேதி) முதல் பெப்ருவரி 08-ம் தேதி வரை நடக்கிறது. இன்று மாலை 6.30 மணிக்கு திருக்கொடியேற்று நிகழ்ச்சியும் தொடர்ந்து 8.30 விஜய் டிவி மற்றும் கைரளி டிவி புகழ் குழுவினரின் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடக்கிறது. 2-ம் நாள் விழாவில் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமியுஜியுஸ் தலைமையில் மறையுரை மாலை 6.30 மணிக்கும், இரவு 8.30 பல்சுவை நிகழ்ச்சியும் நடக்கிறது. 3-ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு முட்டம் மண்டல குருக்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளும் திருப்பலி நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
4-ம் (0-01-2015) நாள் விழாவில் மாலை 6.30 சாலக்குடி டிவைன் குழுவினரின் நற்செய்தி கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. 5-ம் நாள் விழாவில் மாலை 6.30 சாலக்குடி டிவைன் குழுவினரின் குணப்படுத்தும் நற்கருணை ஆராதனை நடக்கிறது. 6-ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு நற்செய்தி கொண்டாட்டம் நடக்கிறது. 7-ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு திருப்பலியும், இரவு 8.30 மணிக்கு இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. 8-ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது.
9-ம் (04-02-2015) நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு திருப்பலியும், இரவு 8.30 மணிக்கு சாலமன் பாப்பையா கலந்து கொள்ளும் மாபெரும் பட்டிமன்ற நிகழ்ச்சி நடக்கிறது. 10-ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு திருப்பலியும், இரவு 8.30 மணிக்கு மெல்லிசை கச்சேரி நிகழ்ச்சியும் நடக்கிறது. 11-ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு திருப்பலியும், இரவு 8.30 மணிக்கு மெல்லிசை விருந்தும் நடக்கிறது. 12-ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு ஆடம்பர மாலை ஆராதனையும் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு வாணவேடிக்கையும், தேர்பவனியும் நடக்கிறது. 13-ம் நாள் நிகழ்வில் மாலை 6.30 மணிக்கு திருக்கொடியிறக்கம் மற்றும் நற்கருணை ஆசீர், தொடர்ந்து பரிசு வழங்குதலும், இரவு 8.30 மணிக்கு விஜய் டிவி புகழ் சூப்பர் சிங்கர் குழுவினரின் மாபெரும் இன்னிசை விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சின்னவிளை பங்குதந்தை, பங்கு பேரவை மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.
0 Comments: