
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு கண்டன்சாஸ்தா கோவிலில் கும்பாபிஷேக விழா: திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்
மண்டைக்காடு கண்டன்சாஸ்தா கோவிலில் கும்பாபிஷேக விழா: திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்
24-01-2015
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உள்ள ஸ்ரீபால்குளம் கண்டன்சாஸ்தா கோவில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா கடந்த 20-ம் தொடங்கி 5 நாட்கள் நடந்தது. தினமும் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நிகழ்ச்சியும், 6.30 மணிக்கு தீபாராதனையும், மதியம் 12.30 மணிக்கு தீபாராதனையும், மதியம் 1 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை 6 மணிக்கு நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் இருந்து யானை மீது சந்தனகுடம் பால்குளம் சாஸ்தா கோவிலுக்கு பவனி வந்தது.
இன்று காலை 7 மணிக்கு பிரதிஷ்டை பூஜைகளும், காலை 11.45 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவிற்கு சுவாமி கருணானந்தஜி மகராஜ், பத்மநாபபுரம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோவில் பொறியாளர் ஐயப்பன், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், ஸ்ரீதேவி கலாமன்ற தலைவர் செல்லத்துரை, செயலாளர் மோகன்தாஸ், மண்டைக்காடு பேரூராட்சி தலைவி மகேஸ்வரி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments: