
சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்: 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு
மணவாளக்குறிச்சி அருகே அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்: 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு
23-01-2015
நாகர்கோவில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் காமராஜ் (வயது 56). இவர் சம்பவத்தன்று குளச்சலில் இருந்து நாகர்கோவிலுக்கு பஸ்சை ஓட்டி சென்றார். பஸ் அம்மாண்டிவிளை சந்திப்பை கடந்து செல்லும்போது எதிர்பாராதவிதமாக ஒரு பைக் மீது பஸ் உரசியதாக தெரிகிறது.
இதனால் பஸ் டிரைவருக்கும், பிலாவிளை பகுதியை சேர்ந்த ராஜன் (வயது 40) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் மாறிமாறி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இரண்டு பேரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து இருவரும் மணவாளக்குறிச்சி போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். பஸ் டிரைவர் காமராஜ் கொடுத்த புகாரின் பேரில் ராஜன், கண்ணன், முருகன், தங்கசாமி உள்பட 5 பேர் மீதும், ராஜன் கொடுத்த புகாரின் பேரில் காமராஜ், ரங்கராஜன் ஆகிய 2 பேர் மீதும் மொத்தம் 7 பேர் மீது மணவாளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
0 Comments: