
Manavai News
மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கு
மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கு: மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கலந்து கொண்டார்
22-01-2015
குமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன், மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கல்வி கருத்தரங்கில் கலந்து கொண்டார். இதில் கல்வியில் பின்தங்கிய மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மனோதிடமே மாணவர்களின் முதுகெலும்பாகும். ஒரு மாணவனின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்பதற்கு அடையாளம் அவனது எண்ணத்தின் உறுதியாகும். மேலும் ஒருவன் எந்த செயலை மேற்கொள்கிறானோ அதை இரும்பு பிடியாக பற்றி நிற்கும் உறுதி அவன் சந்திக்கின்ற எல்லாத் துன்பங்களையும், தோல்விகளையும் வென்று முன்னேற்றமடைய முடியும்.
மேலும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு மனோசக்தியை ஒழுங்கான முறையில் பழக்கி விருத்தி செய்து கொள்வது அவசியமானதாகும். நெருப்பு எவ்விதம் பொன்னை ஒளிரசெயகிறதோ, அதுபோன்று துன்பங்களும் மனோசக்தியுள்ளவர்களை ஒளிரசெய்யும். என்பன உள்ளிட்ட கருத்துகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் தக்கலை கல்வி மாவட்ட கல்வி அலுவலர் ஜேக்கப் அருள் மாணிக்கராஜ், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜிம்சன், பாபுஜி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜாண் கிறிஸ்டோபர், மனநல ஆலோசகர் யூனிஸ்கான், பள்ளி துணை ஆய்வாளர் ஐயப்பன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments: