
Other News
அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பில் மாநில இளைஞர் மாநாடு நடந்தது
அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பில் மாநில இளைஞர் மாநாடு நடந்தது
27-01-2015
அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பில் மாநில இளைஞர் மாநாடு குடியரசு தின விழாவை முன்னிட்டு திருநெல்வேலி திருநகர் நெல்லையப்பர் கோவில் அருகில் உள்ள பார்வதி சேஷா மஹாலில் வைத்து நேற்று நடைபெற்றது. இதில் நெல்லை காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார், மக்கள் நலகழக மாநில தலைவர் சிவகுமார், துணைத் தலைவர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் போது மக்கள் நலக்கழகம் சார்பில் அளிக்கப்பட்ட பேட்டியில்:- தமிழநாட்டில் வன்முறைகள் நடக்காமல் இருக்க மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் வன்முறை நடக்காமல் இருக்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்” எனக்கூறப்பட்டுள்ளது.
வன்முறை இல்லாத சமுதாயம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற முதல் வெற்றியாளருக்கு ரூ.5 ஆயிரமும், இரண்டாம் வெற்றியாளருக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் புதியபுயல் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: