சுற்றுவட்டார செய்திகள்
முட்டம் சகல புனிதர்கள் ஆலய நூற்றாண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
முட்டம் சகல புனிதர்கள் ஆலய நூற்றாண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
26-10-2004
முட்டம் சகல புனிதர்கள் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் வருடாந்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று பகல் 2 மணிக்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலயத்தில் இருந்து கொடியுடன் ஜோதி ஓட்டமும், மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், இரவு 7 மணிக்கு திருப்பலியும் நடந்தது. இதற்கு கோட்டாறு மறைமாவட்ட செயலர் ஜி.பெலிக்ஸ் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி பங்குதந்தை எஸ்.நசரேன் மறையுரையாற்றினார். இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று முன்தினம் மாலையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் மறையுரை நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு செபமாலை, 6.30 மணிக்கு திருப்பலி, இரவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 28-ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் ஊட்டிமறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு ஆண்டு விழா நடக்கிறது.
31-ம் தேதி காலை 6.15 மணிக்கு குழந்தைகளுக்கு திருமுழுக்கு, மாலை 6 மணிக்கு செபமாலை, 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை ஆகியவை கோட்டாறு மறைமாவட்ட பொருளாளர் எம்.பிரான்சிஸ் போர்ஜியோ தலைமையில் நடக்கிறது. குளச்சல் மறைமாவட்ட முதன்மை பணியாளர் எம்.உபால்டு மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு வாணவேடிக்கையும், கலைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
அடுத்தமாதம் 1-ம் தேதி காலை 5 மணிக்கு திருப்பலி, 6.15 மணிக்கு சகலபுனிதர் நவநாள், 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி ஆகியவை கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் நடக்கிறது. தொடர்ந்து புதிய நற்கருணை ஆராதனை சிற்றாலயத்தை ஆயர் திறந்துவைக்கிறார். இரவு 9 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை முட்டம் சகல புனிதர்கள் ஆலய பங்குமக்கள், பங்கு அருட்பணி பேரவை மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
0 Comments: