Manavai News
மணவாளக்குறிச்சியில் ஜெயலலிதா விடுதலையை தொடர்ந்து அதிமுகவினர் கொண்டாட்டம்
மணவாளக்குறிச்சியில் ஜெயலலிதா விடுதலையை தொடர்ந்து அதிமுகவினர் கொண்டாட்டம்
22-10-2014
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இதை தொடர்ந்து மணவாளக்குறிச்சியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (17-ம் தேதி) அன்று உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் வழங்கியதை தொடந்து மணவாளக்குறிச்சி பகுதி அதிமுகவினர், மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் பட்டாசு வெடித்தனர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எரோணிமூஸ், மணவாளக்குறிச்சி கூட்டுறவு சங்க தலைவர் எம்எஸ்எம் பஷீர், மாவட்ட வழக்கறிஞர் அணி சந்திரசேகர், வார்டு கவுன்சிலர் அப்துல் சலாம், சேமக்கண் உள்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments: